Monday, May 4, 2009

கிறுக்கல்கள்

சதையில்லா எலும்பினைபோல
சிறகொடிந்த பறவையைபோல
காய்ந்த சருகுகளும் விட்டகல
தன் நிர்வாணத்தை மறைத்துக்கொள்ள
வெள்ளாடையை சிலநாட்கள் உடுத்தி
காலம்மாறும் என்ற நம்பிக்கையில்
உயிரை உடலில் தாங்கிநின்று
குளிர்காலம் முடிந்த பொழுதில்
இயற்கை விதிப்படி காலம்மாற
ஞாயிறும் நீர்த்துளிகளும் உதவ
மறுசென்மம் எடுத்த நோயாளிபோல
புத்துயிர் பெற்று பொலிவுடன்
பல வண்ணங்களில் உடையுடுத்தி
மகிழ்ந்தும் பிறர்க்கு மகிழ்ச்சியளிக்கவும்
தலையாட்டி சீட்டியடித்து அழைத்தன
எனது மாளிகை வாசலில்
வரிசையில் நின்றிருந்த மரங்கள்.

9 comments:

பதி said...

மணி,

நல்லா இருக்கு.. :))))

//ஞயாயிறும்//

ஞாயிறும்

மணிநரேன் said...

என்னவோ தவறாக இருக்குதேனு யோசித்துகொண்டே இருந்தேன். திருத்தியதிற்கு நன்றி பதி.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஒரு மரத்துக்கு இவ்ளோ வர்ண்னையா? அசத்துங்க தல

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//தன் நிர்வாணத்தை மறைத்துக்கொள்ள
வெள்ளாடையை சிலநாட்கள் உடுத்தி//

இந்திய மரங்கள் அப்படி இல்ல தல..

எல்லாமே இயற்கைதான்....


(விதவை மறுமணம் பற்றி இல்லையென்றால் இந்த பின்னூட்டத்தை போட்டுக் கொள்ளுங்கள்)

மணிநரேன் said...

கருத்திற்கு நன்றி SUREஷ்.
நம் நாட்டிலும் வடக்கே (இமயமலை பகுதிகள்) சென்றால் அப்படியிருக்க வாய்ப்புள்ளது. தெற்கே வாய்ப்பேயில்லை. பருவநிலை மாறியபோது ஏற்பட்ட மனமகிழ்ச்சியால் எழுதப்பட்டது.

முனைவர் இரத்தின.புகழேந்தி said...

மரங்களை மற்ந்து மனிதன் வாழ முடியாது நண்பா பிரான்ஸிலிருந்தாலும் மரங்களை இயன்ற அளவு வளர்க்க முயற்சி செய்யுங்கள்.

முனைவர் இரத்தின.புகழேந்தி said...

மரங்களை மறந்து மனிதன் வாழ முடிய்மா நண்பா?

சந்தனமுல்லை said...

மரங்களுக்காக ஒரு கவிதை..அழகா இருக்கு!

மணிநரேன் said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி முனைவர் புகழேந்தி, முல்லை.

இயற்கையின் படைப்பில் ஒன்றான மரங்களை மறந்தால் மனிதகுலமும் இல்லாமல்போய்விடும்.