Monday, September 7, 2009

விடுமுறை இறுதியில் கண்டுகளித்தவை

தற்போது நான் வசிக்கும் இந்த திசான் (Dijon) நகரில் ஆகஸ்ட் மாத இறுதியில் Dijonfest எனப்படும் நாட்டிய-இசை விழா ஒருவார காலம் நடந்தது. இதில் பல நாடுகளின் பாரம்பரிய நடன/பாடல் நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இந்தியாவின் சார்பில் கேரளத்து கதக்களி நடனம் நடைப்பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. விழா முடிவடையயிருந்த இரண்டு நாட்கள் முன்னர்தான் விழா பற்றிய செய்தியையே நான் அறியப்பெற்றேன். அதனை காண சென்றபோது எடுத்த சில புகைப்படங்களையும், சில காணொளிகளையும் இதில் காணலாம். இரண்டும் மிகவும் திட்டமிட்டு எடுக்கப்பட்டதல்ல; ஆகையால் அவற்றில் குறைகள் இருக்க வாய்ப்புள்ளது.

கதக்களி நடைபெறுவதாய் இருந்த இடத்திற்கு சென்றோம். முதலில் தென் ஆப்பிரிக்க நடனம், தொடர்ந்து இந்தியாவின் கதக்களி மற்றும் இறுதியாக போர்த்துகீசிய நடனம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொன்றும் முப்பது நிமிடங்கள் நடப்பதாக இருந்தது. ஏனோ நாங்கள் சென்ற அன்று கதக்களி நடைபெறவில்லை. அதனால் மற்ற இரண்டு குழுக்களும் கூடுதல் நேரம் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை மகிழ்வித்தனர்.


தென் ஆப்பிரிக்க குழு


அவர்களின் குழு நடனம்


தனித்து நடனமாடிய குழந்தை



போர்த்துகீசிய இசைக்குழு


அதில் நடனமாடுபவர்களின் ஒரு பகுதி


அவர்களின் குழு நடனம்



மற்றொரு இடத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த பிரான்சு நாட்டின் போர்கோன் பகுதியின் நடனம்



தென் ஆப்பிரிக்க நடனம்




முடிவில் ஒரு தென் ஆப்பிரிக்க பாடல்




போர்த்துகீசிய நடனத்தின் துவக்கம்

1 comment:

பதி said...

மணி,

படங்களும் காணொளித் தொகுதிகளும் நன்றாக உள்ளது.

Mercy beaucoup !!!!!!!!!!

சென்ற ஆண்டு Nantees நகரில் உலாவிக் கொண்டிருந்த போது இது போன்ற நடனங்களை கண்டேன். கையில் காமிரா இருந்தும் ஏனோ வீடியோ எடுக்கத் தோன்றாமல் விட்டுவிட்டேன்....