இறக்கும் நாள் தெரிந்தால் வாழும்நாள் நரகமாகிவிடும் என்று படித்ததுண்டு. அதை போன்றதொரு நிலையில் தற்போது உள்ளது போன்று உணர்கிறேன். நிற்க... எனது இறக்கும் நாள் எல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் எனது இரண்டு மாத விடுமுறை முடிந்து இங்கிருந்து நான் கிளம்பும் நாள் முடிவாகிவிட்டது. கிளம்ப இன்னும் நான்கைந்து நாட்கள் உள்ளன. எனினும் கடந்த இரண்டு வாரங்களாகவே மனம் ஏனோ மிகவும் தடுமாறிக்கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் ஒருவித பதற்றத்துடன்தான் விடிகின்றது. அடுத்து செல்லப்போகும் இடம் மிகவும் ஆவலுடன் முயன்று, காத்திருந்து செல்ல அனுமதி பெற்ற இடம். சுமார் மூன்றாண்டு கனவு இது. இருந்தும், கிளம்பும் நாள் நெருங்க நெருங்க மனதில் இனம்புரியாத உணர்ச்சி ( வலி, கலவரம்...) பற்றிக்கொண்டு எறிகின்றது. கனவு தேசத்திற்கு கிளம்புகிறாய் என்றும் உனது நெடுநாளைய கனவு பலிக்க போகின்றது என்றும் கலாய்த்த, வாழ்த்திய எனது நெருங்கிய நட்புக்களுக்குகூட தெரியாது எனது மனதில் நான் நடத்திக்கொண்டிருக்கும் இந்த போராட்டம். இந்த பல்கலைகழகத்திற்கு ஓரிரு ஆண்டுகளாவது செல்லவேண்டும் என்ற அவாவுடன் விரும்பி ஏற்றுக்கொண்டதொரு பணியிடம் இது. எனினும், எதனால் என் மனம் இவ்வளவு தடுமாறுகின்றது என்று தெரியவில்லை. இதுவரை புதிய இடத்திற்கு செல்லும்போது இவ்வாறான நிலையில் இருந்ததில்லை. இப்போது ஏன் என்று புரியவில்லை. குடும்ப கூட்டினைவிட்டு மீண்டும் தனிமையை நோக்கி செல்வதாலா என்று தெரியவில்லையே. ம்... எடுத்த பணியினை முடிக்காமல் விடமுடியாது. அதற்காகவாவது சென்றுத்தான் ஆகவேண்டும். இப்போதைய வேண்டுதலெல்லாம் இருக்கும் இந்த இறுதி நாட்கள் மெதுவாக செல்லவேண்டும் என்பதுதான். நேரம் ஒரேமாதிரிதான் செல்லும் என்று தெரியும். மனமாவது மெதுவாக செல்வதுபோல உணரவேண்டும். ம்....உணர்த்த முடியா உணர்ச்சிகளுடன் இங்கே மீதமிருக்கும் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றேன்...
𝑹𝒆𝒂𝒅 𝒕𝒉𝒆 𝑷𝒐𝒆𝒎 𝑴𝒐𝒓𝒆 𝑻𝒉𝒂𝒏 𝑶𝒏𝒄𝒆
2 days ago
6 comments:
பதற்றம் வேண்டாம் நண்பரே. எல்லாம் நல்லதாகவே நடக்கும். இது போன்ற கலவரம் எனக்கும் சில சமயம் உண்டு. சரியாகிவிடும். காலம் சரியாக்கி விடும். வாழ்த்துக்கள் நரேன்.
மணி,
என்ன பீலிங்ஸ்?? என்ன மாதிரியான கேள்விகளை எல்லாம் இதனால வாங்கி இருப்போம்னு கொஞ்சம் நினைச்சு பாருங்க !!!!
கில்லி மாதிரி கிளம்பி முன்னாடி போங்க.. பின்னாடி வந்துகிட்டே இருக்கேன் !!!! :-)
கருத்திற்கு நன்றி விக்னேஷ்வரி.
பதி...உண்மையிலேயே ரொம்ப பீலிங்ஸாதான் இருக்கு.
just get on and keep going..
ம்ம்...இரஞ்சித்.
வாங்க சொல்றேன்; துணிபோடு எதிர்கொள்வோம்!!
Post a Comment