யாருமற்ற நேரங்களில்
தனிமையின் நிசப்தங்களில்
செவிகளில் பாய்வது
மரணத்தின் ஓலங்கள்.
எதை தேடி இந்த பயணம்
யாரை ஏமாற்றி இந்த வாழ்வு
ஏதேதோ சாக்குபோக்கு கூறினாலும்
உண்மையான பதில் கூறியதாய்
தெரியவில்லை...
கூறத்தெரியவுமில்லை.
தோள் சாய யாருமின்றி
மொழி பேச நாதியின்றி
கரையும் நேரங்கள் கொடிது.
நேரில் பேச யாருமில்லாமல்
பேசும் சில மனிதர்களுக்காக
பல மணிநேரம்
கணினி முன் காத்திருந்து
சில மணிகளுக்கப்பால் பேச விசயங்களின்றி
நேரத்தை கொல்லும் நிலைமை...
அனுபவிக்கையில் கொடுமை.
என்னியல்பில்லாத குணங்கள் புதிதாய்
குடிகொண்டுள்ளன...
பொறாமை...
பலரின் சொல்லும் செயலும்
ஏற்படுத்தும் ஏக்கம்
விளைவோ
ஏராளமானோர் மீது பொறாமை.
எதிர்பாராமல்
என்னுள்ளும் பொறாமை.
நிலை மறந்த இக்குணத்தால்
என் மனமும்
கேவலமானவனே என்கிறது...
என்னை
குற்றவாளியாக்கிவிட்டது.
மனம் சஞ்சலத்தில் அலைபாய
குற்றயுணர்ச்சியில்
மனம் சங்கடப்படுத்துகின்றது.
ரசித்த விசயங்கள்
சுவையிழந்து போகின்றன
அர்த்தமற்றதாகி போகின்றதோ வாழ்க்கை.
தொலைத்துக்கொண்டிரிக்கின்றேனோ என்னை...
புரியவில்லை.
மரணத்திருக்கலாமோ என்கிறது
ரணமான மனம்.
𝑹𝒆𝒂𝒅 𝒕𝒉𝒆 𝑷𝒐𝒆𝒎 𝑴𝒐𝒓𝒆 𝑻𝒉𝒂𝒏 𝑶𝒏𝒄𝒆
1 day ago
3 comments:
மணி,
இவ்வளவு பெருசா எழுதியிருக்கிறதுக்கு, ஒத்த வரியில பதில் சொல்லுறேன்.
அக்கரைக்கு இக்கரை பச்சை. :(
அவ்வளவு தன்..மற்றவற்றை, அதே கணிணி முன்னாடி உக்காந்து கொல்லும் போது சொல்லுறேன்.
நல்லாருக்குங்க மணிநரேன்.
நன்றி பா.ரா
Post a Comment