கிழக்கே கடற்கரையில் காலை சூரிய உதயத்தை பார்ப்பது வெகு அழகு. சென்னையில் இருந்தாலும் வெகு குறைவான எண்ணிக்கையிலேயே அவ்வாறான உதயத்தை காணும் வாய்ப்பு பெற்றுள்ளேன். அதற்கு பதிலாக, இம்முறை மேற்கே மலைத்தொடர்களின் நடுவினில் வித்தியாசமான அழகுடன் கூடிய சூரியோதயம் காணும் வாய்ப்பு கிடைத்தது. முகத்தில் அறைந்தார்போல வீசிய சில்லென்ற காற்றும், அதிகாலை சூரியனும் அந்த உயரத்தில் ஓர் இனம்புரியாத மகிழ்ச்சியை மனதினுள் அளித்தது என்றால் அது மிகையாகாது.
மெல்ல மெல்ல பசுமை காட்சிகள் கண்முன் விரிந்துகொண்டிருந்தது. இருளில் ஒரு மலைத்தொடராக தெரிந்தவை, வெளிச்சம் வரவர பல அடுக்கு தொடர்களாக தங்கள் உண்மை நிலையினை எங்கள் சிறு கண்களுக்கு காட்டத்தொடங்கின. இயற்கையின் படைப்பில் மனிதர்கள் நாமெல்லாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை அந்த அதிகாலை காட்சிகள் உணர்த்தியது.
அந்த அழகினை ரசித்து கொண்டிருக்கவே தோன்றியது; நேரம் பார்க்க தோன்றவேயில்லை. ஆசைதீர அந்த இடத்தில் காலைப்பொழுதினை கழித்தோம். அந்த ஆனந்தமெல்லாம் அனுபவிக்க வேண்டும்; எந்தவிதமான வார்த்தைகளும் அதனை வெளிப்படுத்த இயலாது. வெகு நேரம் அங்கிருந்துவிட்டு, தடியண்டமோல் நோக்கி பயணமானோம்.
4 comments:
/*இயற்கையின் படைப்பில் மனிதர்கள் நாமெல்லாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை அந்த அதிகாலை காட்சிகள் உணர்த்தியது.*/
உண்மை. அருமையான படங்கள்
நன்றி அமுதா.
ஆவலைத் தூண்டும் பதிவு..
படங்கள் எல்லாம் அருமை மணி. கடைசி படம் செம ரசனை.. :)
நன்றி சஞ்சய்.
Post a Comment