Saturday, March 14, 2009

முதல் முயற்சி

வலைப்பதிவு எழுத வேண்டும் என்ற அவா வெகுநாட்களாக இருந்தது; எனினும் அதனை எவ்வாறு ஆரம்பிப்பது என்று சரியாக தெரியவும் இல்லை, அதற்கான முழுமையான முயற்சியையும் செய்யவில்லை. எனது நண்பன் வீட்டிற்கு சென்றபோது நான் அவனிடம் கேட்க உடனடியாக இந்த வலைப்பதிவை ஆரம்பித்துகொடுத்தான். அட இவ்வளவு எளிமையாக உள்ளதே என்று அப்போதுதான் உணர்ந்தேன். அடுத்து தமிழில் எழுத விருப்பப்பட்டதால் அதற்கும் அவனது உதவி கிடைத்தது. நண்பன் கையேடு இரஞ்சித்திற்கு (http://kaiyedu.blogspot.com) நன்றிகள்.

இங்கே எனது ஒருசில பயண அனுபவங்களையும், என்னை பாதித்த, பாதிக்கின்ற விஷயங்களையும், நான் இரசித்த புகைப்படங்களையும், எனது எண்ணங்களையும் பதியவைக்க முயற்சிக்கின்றேன். பள்ளியில் சிலவற்றை கவிதை என்ற பெயரில் கிறுக்கியதுண்டு. வெகு ஆண்டுகள் ஆகிவிட்டது. என்னால் ஏதேனும் நல்லமுறையில் இப்போது எழுத முடிகிறதா என்பதை கண்டறிய எழுத ஆரம்பிக்கின்றேன்.

4 comments:

கோவி.கண்ணன் said...

//வலைப்பதிவு எழுத வேண்டும் என்ற அவா வெகுநாட்களாக இருந்தது; எனினும் அதனை எவ்வாறு ஆரம்பிப்பது என்று சரியாக தெரியவும் இல்லை, அதற்கான முழுமையான முயற்சியையும் செய்யவில்லை.//

இப்படி நினைப்பவர்கள் தான் அப்பறம் பிச்சு உதருவாங்க.

உங்களுக்கு பலமான வரவேற்பு மற்றும் வாழ்த்துகள் !

மணிநரேன் said...

நன்றி திரு. கோவி.கண்ணன் அவர்களே.

கையேடு said...

வாழ்த்துக்கள் மணி.. :)

பதி said...

வாழ்த்துக்கள் மணி !!!!

//நண்பன் கையேடு இரஞ்சித்திற்கு (http://kaiyedu.blogspot.com) நன்றிகள்.//

இந்த பதிவர்களே இப்படித் தான் !!!! யாராவது நிம்மதியா இருந்தா அவங்களுக்கு புடிக்காது.:)