Monday, June 15, 2009

இப்போதெல்லாம்...

இப்போதெல்லாம்....
  • வாழ்க்கை ரொம்ப சிறியது; வாழப்போகும் காலம் சில ஆண்டுகளே; இருக்கும்வரை அனைவரும் அன்பு பாராட்டி, மகிழ்வாக இருப்போமே என்று அதிகம் எண்ணவும், கூறவும் ஆரம்பித்துவிட்டேன்.
  • வாழ்வில் குறைந்தது கடந்த பத்து ஆண்டுகளை வீணடித்துவிட்டது போல தோன்றுகிறது.
  • இன்றும் வாழ்க்கையை இழந்து/தொலைத்து கொண்டிருக்கின்றேனோ என்றே தோன்றுகிறது.
  • என்னில் என்னவோ தவறாக இருப்பது/நடப்பது போலவே மனதில் படுகிறது (something is wrong with me).
  • மற்றவர்கள் செய்யும் செயல்களில் உள்ள சிறுசிறு தவறுகளும் கண்ணில் பூதாகாரமாய் தெரிகிறது.
  • கணினி இல்லாமல் முழுதாக ஒரு நாளாவது இருக்கமுடியாதா என்று ஏங்குகிறது.
  • யாராவது வந்து பேசிக்கொண்டிருக்க மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கின்றது.
  • என்னை எப்போதும் இணையத்தில் ஆன்லைனில்(online) இருப்பதாக புகார் கூறும் நண்பர்களுக்கு அவர்களே தேடும்படி கணினியில் அதிக நேரம் செலவழிக்க முடியாத அளவிற்கு ஓய்வில்லாமல் இருக்கும் நாள் வராதா என்று மனம் கேட்கிறது.
  • முழுமையாக இருந்த இறைநம்பிக்கை குறித்து மனதில் பல கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளது.
  • நியாயமான வன்முறையும் தவறில்லை என்று தோன்றுகிறது.
  • வாழ்க்கையில் மிகுந்திருந்த நம்பிக்கையைவிட குழப்பங்களும், பயமும் அதிகமாகிவிட்டது.



12 comments:

ஆயில்யன் said...

//என்னை எப்போதும் இணையத்தில் ஆன்லைனில்(online) இருப்பதாக புகார் கூறும் நண்பர்களுக்கு அவர்களே தேடும்படி கணிணியில் அதிக நேரம் செலவழிக்க முடியாத அளவிற்கு ஓய்வில்லாமல் இருக்கும் நாள் வராதா என்று மனம் கேட்கிறது.///
சூழநிலைகளோடு ஒப்பீட்டு பார்க்கையில் இந்த வாழ்வின் அருமை புரிபடும் ! :)

”இப்போதெல்லாம்” எண்ணங்கள் எல்லோருக்கும் ஏற்படுவதுதான்

அருமை தமிழில் சொல்லணும்ன்னா ஸேம் பிளட் :))))))

கையேடு said...

//பத்து ஆண்டுகளை வீணடித்துவிட்டது போல்..//

மணி நாம நண்பர்களாகியும் பத்தாண்டு ஆகுது. இதுல ஏதோ உள்குத்து இருக்கும் போல.. :)

மணிநரேன் said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஆயில்யன்.

இரஞ்சித்...இப்படியெல்லாம் தோனுதா.உனக்கே இது நியாயமா? உள்குத்தும் இல்லை, வெளிகுத்தும் இல்லை.நமது வாழ்வில் அது ஒரு முக்கியமான காலம் என்று நம்புகின்றேன். எவ்வளவோ செய்திருக்க வேண்டும். எதையுமே சரியாக செய்யாதது போலதான் தோன்றுகிறது...:(
( உள்குத்தாக பார்த்தால், உன்னோடு பழக ஆரம்பித்து இத்தனை ஆண்டுகளாகியும் எளிதில் தெளிவான முடிவுகள் எடுக்க உன்னிடமிருந்து நான் கற்றுக்கொள்ளவில்லை..:( )

rapp said...

மணிநரேன், இதுக்குத்தான் வெயிட் பாக்காக்கூடாது. இந்த மாதிரி கண்டபடில்லாம் தோணும்:):):)

மணிநரேன் said...

rapp...
//வெயிட் பாக்காக்கூடாது.// என்ன சொல்றீங்கனே புரியலியே.தயவு செய்து விளக்கவும்.

எம்.எம்.அப்துல்லா said...

/வாழ்க்கையில் மிகுந்திருந்த நம்பிக்கையைவிட குழப்பங்களும், பயமும் அதிகமாகிவிட்டது.

//

என்ன 30 வயசாகுது உங்களுக்கு?? டோண்ட் ஒர்ரி...40 வயசுல இந்த பயம் இன்னும் ஜாஸ்தியாகும், அப்ப இந்த பயம் ரொம்ப சாதாரணமாப் போய்டும் :)

ஷண்முகப்ரியன் said...

வாழ்க்கையில் மிகுந்திருந்த நம்பிக்கையைவிட குழப்பங்களும், பயமும் அதிகமாகிவிட்டது.//

எல்லாத் தேடல்களும் நிறைவிலிருந்து தொடங்குவதில்லை.இதுபோலக் குழப்பங்களில் இருந்தும்,போதாமையில் இருந்தும்தான் ஆரம்பிக்கும்,மணிநரேன்.

TAKE OFF O.K. I WISH YOU A SAFE LANDING.

மணிநரேன் said...

திரு.அப்துல்லா..அதுவும் சரிதான் போல, நம்புவோம்.

திரு.ஷண்முகபிரியன்..வாழ்த்துக்களுக்கு நன்றி.

இருவரது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

Unknown said...

கடவுள் உனக்கு திருமண வரம் அளித்து உன் சாத்தானின் "designation" ஐ மாற்றட்டும்.
-Rajasekaran

பதி said...

//என்னை எப்போதும் இணையத்தில் ஆன்லைனில்(online) இருப்பதாக புகார் கூறும் நண்பர்களுக்கு அவர்களே தேடும்படி கணினியில் அதிக நேரம் செலவழிக்க முடியாத அளவிற்கு ஓய்வில்லாமல் இருக்கும் நாள் வராதா என்று மனம் கேட்கிறது.//

என்ன மணி, ஒருத்தன் ஒரு வாரம் ஊர்ல இல்லைனா என்னென்னவோ நடந்திருக்கு போல ????

// கையேடு said...
//பத்து ஆண்டுகளை வீணடித்துவிட்டது போல்..//

மணி நாம நண்பர்களாகியும் பத்தாண்டு ஆகுது. இதுல ஏதோ உள்குத்து இருக்கும் போல.. :)//

அப்பாடி, நான் இந்த வட்டத்துல இல்லை !!!!!!!!!

;))))))

அன்புடன் அருணா said...

ரொம்ப அருமையான சுய விமரிசனம்...

மணிநரேன் said...

பதி...இது ஒரு வார பிரச்சினை இல்லை.பல நாள் குற்றச்சாட்டு.

ஆமாங்க அருணா...சுய விமர்சனம் ரொம்ப அவசியமாக இருக்கு.நம்மில் இருக்கும் சில தவறுகளை ஒரு நடுநிலையோடு பார்க்க இது தேவை என நினைக்கிறேன்.